கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று(திங்கட்கிழமை) முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் H.M.K. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இதுவரை கணக்காய்வு சேவை ஸ்தாபிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கணக்காய்வு அதிகாரிகளுக்கு நிரந்த நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என H.M.K. ஹேரத் தெரிவித்துள்ளார்.

