பொதுத்தேர்தலில் மாபெரும் தோல்விக்கு சஜித் கூட்டணி தயாராகி வருகிறது- தயாசிறி

299 0

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும்  பாரிய தோல்வியை அடைவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியில் பின்பற்றப்பட்டு வந்த ஒழுக்கம் சிதைக்கப்பட்டு தற்போது அந்த கட்சி பாரிய பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சின்னம் தொடர்பாக தீர்வு காணப்படாமல் தொலைபேசியை சின்னமாக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

வரலாற்றில் இது போன்றதொரு சின்னத்தை ஐ.தே.க.முதல் தடவையாக தெரிவு செய்துள்ளது. உண்மையில் அந்த கட்சியின் தற்போதைய நிலைவரம் கவலையளிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.