தென் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

323 0

தென் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் காய்ச்சல் உள்ளமையினால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் இருந்து இலங்கைக்கு 137 பேர் வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 376 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக நேற்றைவிட இன்று மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது எனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக 376 பேர் புதிதாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர் என்றும் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,526 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்நிலையம் தெரிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை தென் கொரியாவில் 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.