பிரதி ஆளுநர் நந்தலால் நியமிக்கப்படும் சாத்தியம்

631 0

central-bank1இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக பிரதி ஆளுநர் பதவி வகிக்கும் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்க நிய­மிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அதே­வேளை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் இலங்­கைக்­கான பிரிட்டன் உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் பதவிக் காலம்நேற்று 30 திக­தி­யுடன் முடி­வ­வ­டைந்த நிலையில் அவ­ருக்கு பதவி நீடிப்பு வழங்க வேண்­டா­மென ஜே.வி.பி. பொது எதிர்க்­கட்சி தரப்­பி­னரும் மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சி­யினை சார்ந்த பல அமைச்­சர்­களும் தமது கடு­மை­யான எதிர்ப்பை கடந்த காலங்­களில் வெளி­யிட்டு வந்­தனர்.

மத்­திய வங்கி ஆளு­நரை வெளி­யேற்ற வேண்டும் என கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­டத்­தையும் பொது எதிர்­கட்­சி­யினர் நடத்­தினர்.இவ்­வாறு நாட்­டுக்குள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ர­னுக்கு எதி­ரான விவா­தங்கள், விமர்­ச­னங்கள் தலை­தூக்­கிய நிலையில் 29 ஆம் திகதி புதன்­கி­ழமை கிராந்­துரு கோட்­டையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மத்­திய வங்கி ஆளு­ந­ராக புதி­யவர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனத் தெரி­வித்தார்.

அன்­றைய தினமே மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் மத்­திய வங்கி வளா­கத்­திற்கு விஜயம் செய்து மத்­திய வங்கி மற்றும் நாட்டின் பொரு­ளா­தார நிலை­மைகள் தொடர்­பாக பிரதி ஆளு­நர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­னார்கள். இதன்­போது அர்ஜுன் மகேந்­தி­ரனும் கலந்து கொண்டார்.

இவ்­வாறு மத்­திய வங்கி ஆளுநர் நிய­மனம் தொடர்பில் இழு­பறி நிலை தலை­தூக்­கி­யி­ருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி வகிக்கும் நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

Leave a comment