வவுனியாவில் பண அட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது(காணொளி)

311 0

vavuniyaவவுனியாவில் பணஅட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இலங்கை வங்கியில் பனம் பெறும் இலத்திரனியல் இயந்திரத்தில் இரகசியமான முறையில் கமராவினைப் பொருத்தி வங்கி வாடிக்கையாளரின் இரகசிய கடவுச் சொல் மற்றும் பண அட்டையின் இலக்கங்களை பெற்று வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை சூறையாடியதாக சந்தேகிக்கப்படும் நால்வரை வவுனியா பொலிசார் இன்று கைது செய்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் பெண்ணொருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து மூன்று இலட்சம் ரூபா பணம் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜே.பெரேரா தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையினையடுத்து, நான்கு சந்தேக நபர்கள் உட்பட போலி கடனட்டை செய்யப்பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

இவ்வங்கி மோசடியில் ஈடுபட்ட வவுனியாவைச்சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்துவந்த இருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் சந்தேக நபர்களை நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னிணைப்பு

வவுனியா இலங்கை வங்கியின் பணம்பெறும் தானியங்கி இயந்திரத்தில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் பணம் பெறும் தானியங்கி இயந்திரத்தின் மூலம் பல இலட்சம் ரூபாக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து மூன்று இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த வங்கியின் பணம் பெறும் தானியங்கி இயந்திரத்தின் மூலமாகவே பணம் திருடப்பட்டுள்ளது என அறிந்த பொலிசார் குறிப்பிட்ட இயந்திரத்தை சோதனையிட்டபோது மிகவும் நுட்பமான முறையில் சிறிய கெமரா பொருத்தப்பட்டு இருந்ததுடன் அதன் முலம் வங்கி வாடிக்கையாளரின் கடவுச்சொல் மற்றும் பணம் பெறும் அட்டை இலக்கம் போன்றன துல்லியமாக திருடப்பட்டு குறிப்பிட்ட மோசடி நடைபெற்றமை தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் குறிப்பிட்ட தானியங்கி இயந்திரத்தை சீல் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிசார் பணம் பறிகொடுத்தவர்களிடமிருந்து மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.