ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது.

259 0

28.02.2020.

ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது

அன்பான உறவுகளே!

சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 09.03.2020 அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி கொரோனோ வைரசுவின் பரவுதலால் நிறுத்தப்பட்டுள்ளது. சுவிற்சலாந்து அரசின் இன்றைய அறிவித்தலின் படி இத்தாலிஇ பிரான்சு நாடுகளிலிருந்து மக்கள் தமது நாட்டிற்குள் வருவதும்இ ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன்இ இவ் அறிவித்தல் 15.03.2020 வரை அமுலிலிருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பெரும்தொகையில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனோ வைரசு வேகமாக தொற்றும் ஆபத்து இருப்பதனாலும்இ தமிழர்கள் வாழும் இரவல் தாயக அரசுகளின் சமூகப்பாதுகாப்பு ரீதியிலான அறிவித்தல்களிற்கு மதிப்பளித்தும்இ எமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களால் வெளியிடப்படும் அறிவித்தல்களை கவனத்திலெடுத்து பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.