வெலிகம மிரிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

