சி.சி.டி.வி கெமராவை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை!

305 0

களனி பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி கெமராவை சேதப்படுத்திய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை களனி பல்கலைக்கழகத்தின் CCTV கெமராவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அகற்றியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.