யானைகளை பதிவு செய்வது தொடர்பான சட்டத்திற்கு அமைய புதிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுச்செயலாளருடன் கலந்தாலோசித்து அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைகளை பதிவு செய்வது தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அனுமதிபெறப்படாமல் அமைச்சரின் விருப்பத்திற்கு அமைய அது தொடர்பான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவை அங்கிகரிக்கப்பட்டவை அல்ல என திலின கமகே ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.
அதற்கமைய குறித்த சட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்கும்படி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு திலின கமகேயின் சட்டத்தரணி தர்மதிலக கமகே ஆணைக்குழுவை கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கைக்கு அமையவே யானைகளை பதிவு செய்வது தொடர்பான சட்டம் குறித்த புதிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை, ரியல் எட்மிரல் டி.கே.பி. தசநாயக்க தொடர்பில் கடற்படையினர் வசம் உள்ள சகல ஆவணங்களையும் ஆணைக்குழுவில் சமர்பிக்குமாறு கடற்படை தளபதிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்கள் தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

