மதுபோதையில் வாகனம் செலுத்திய வங்கி முகாமையாளர் உட்பட 4 பேருக்கு அபதாரம்!

276 0

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 1 இலச்சத்து 95 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவு விடுவித்தார்.

பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு களியாட்டத்திற்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (23) வாகனம் ஒன்றில் சென்று நள்ளிரவு 1 மணியளவில் மட்டக்களப்பை வந்தடைந்து தமது வங்கியில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு வெவ்வேறு பாதையில் திரும்பும் போது போக்குவரத்து பொலிஸாரின் வீதி சோதனையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்.

அவ்வாறு இரு வங்கி முகாமையாளர் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாவும் மற்றவருக்கு 55 ஆயிரம் ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபோதையில் மோட்டர் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவும், அவ்வாறு வேறு ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதவன் உத்தரவிட்டு விடுவித்தார்.