வௌ்ளை வேன் சாரதிகள் இருவரும் பணத்திருட்டு சம்பவத்தில் கைது

268 0

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 02 ஆம் திகதி 44 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து டி56 ரக துப்பாக்கி ஒன்று உட்பட மேலும் சில ஆயுதங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இடையில் வௌ்ளை வேன் ஊடக சந்திப்புடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தலில் ஈடுபட்டதாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்த சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

என்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அதுல சஞ்சீவ ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.