மக்களிடம் மாத்திரமே உடன்படிக்கை செய்வோம்-சஜித்

301 0

எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுமக்களுடன் மாத்திரமே உடன்படிக்கைகளை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முற்போக்கு எதிர்க்கட்சி ஒன்றினை நாம் உருவாக்கி உள்ளோம்.

இதில் முக்கியமானதொரு விடயமென்றால் நாம் யாரிடமும் உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள மாட்டோம்.

இந்த நாட்டில் வாழும் மக்களிடம் மாத்திரமே உடன்படிக்கை செய்துக்கொள்வோம்.

சமாதான மக்கள இயக்கம் என்பது அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் மதவாதம், இன பாகுபாடு ஆகியவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்காது” என குறிப்பிட்டுள்ளார்.