இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

66 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருவதற்காக தனி விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  2 நாள் சுற்றுப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். இதற்காக தனி விமானம்  மூலம்  இந்தியா புறப்பட்டார். இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் டொனால்டு டிரம்ப் நாளை, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  நாளை பகல் 12.30-க்கு அகமதாபாத் வரும் டிரம்ப்-ஐ பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா புறப்படும் முன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய பிரதமர் மோடி என்னுடைய இனிய நண்பர். இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.