பிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்!

950 0

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020 நடனப் போட்டி முதல் நான்கு நாள் நிகழ்வுகள் கடந்த 15 ஆம், 16 ஆம், 17 ஆம் மற்றும் 19 ஆம் நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான குசான்வில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன.
நான்கு நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
முதலாம் நாள் 15.02.2020 சனிக்கிழமை ஆரம்ப நிகழ்வாக 1988 இல் யாழ்.மாவட்டம் இளவாலை மாரீசன் கூடல் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான மோதலில்  வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். போட்டி நடைமுறைகள் குறித்து நடுவர்களால் விளக்கமளிக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் நாள் 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை  ஆரம்ப நிகழ்வாக 18.05.1984 அன்று பொலிகண்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை செல்வம் அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின.
மூன்றாம் நாள் 17.02.2020 திங்கட்கிழமை  ஆரம்ப நிகழ்வாக 05.08.1990 அன்று யாழ் கோட்டைச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்டினன் மாதங்கி அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின.
நான்காம் நாள் 18.02.2020 செவ்வாய்க்கிழமை  ஆரம்ப நிகழ்வாக 26.12.2007 அன்று யாழ் நெடுந்தீவு கடல் சமரில்  வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு , போட்டிகள் ஆரம்பமாகின.
நடுவர்களாக கலந்து சிறப்பித்தவர்களின் விபரம்:
• திருவாட்டி ஞானசுந்தரி வாசன், ராதா நடனாலயம் – சுவிஸ், நாட்டியக் கலைமாணி – யாழ்.பல்கலைக்கழகம், நுண்கலைமாணி – பாரதிதாசன் பல்கலைக்கழகம் – இந்தியா, முதுகலைமாணி – தஞ்சைப் பல்கலைக்கழகம் – இந்தியா.
• திருவாட்டி சந்திரவதனி விஜயசுந்தரம், சுவிஸ் திருகோணேஸ்வரா நடனாலயம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலைமாணி – நடனம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலைமாணி – தமிழ்,  தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முனைவர்  பட்டதாரி,
• திருவாட்டி ஜெயந்தி யோகலிங்கம் – யாழ்.ஏழாலை அபிநய கலாமன்றம், நாட்டியமாணி – யாழ்.பல்கலைக்கழகம், முதுகலைமாணி – சென்னை பல்கலைக்கழகம், முதுதத்துவமாணி – யாழ்.பல்கலைக்கழகம், பரதகலாவித்தகர் – வடஇலங்கை சங்கீத சபை.
• திருவாட்டி ஜொசிட்டா ஹெரால்ட் – ஆடற்கலைச்செல்வி, கலாஷேத்ரா பட்டதாரி, ஜப்பானியத் தூதரகத்தால் புன்கா விருது பெற்றவர்.
• திருவாட்டி மதுரன் இந்திக்கா – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் – நுண்கலைமாணி , வடஇலங்கை சங்கீதசபை.
• திருவாட்டி காசிவிசுவநாதர் காசினி – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் – நுண்கலைமாணி , அண்ணாமலை பல்கலைக்கழகம் – முதுகலைமாணி, வட இலங்கை சங்கீதசபை – கலாவித்தகர்.


• திருவாட்டி சரண்யா நிசாந்தன் தங்கரட்ணம் – நாட்டிய கலாஜோதி, கலாவித்தகர், ஜேர்மன் பரதசேத்ரா நாட்டிய ஆலயத்தின் அதிபர், ஜேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர், ஜேர்மன் மேஜர் பாரதி கலைக்கூடத்தின் நடன ஆசிரியர்.

இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவுகள் வருமாறு:-

பாலர் பிரிவு – தனி
1ம்இடம்: தில்லைரூபன் மதுசாயினி
2ம் இடம்: பிருந்தன் அக்ஷயா
2ம் இடம்: கயவதனன் சோபி
3ம் இடம்: இளங்குமரன் ஹரிசனா
3ம் இடம்: தயானாத் அனமிகா

• கீழ்ப்பிரிவு – தனி
• பிரிவு  (அ) 1 ஆம் இடம்: லோயன் சாதனா. 2 ஆம் இடம்: ரமேஸ்கரன் வானதி 3 ஆம் இடம்: சோமசுந்தரம் ஸ்கவிகா 3ஆம் இடம்: சதாசிவம் அபினயா
• பிரிவு (ஆ) 1 ஆம் இடம்: முகிலன் அபிஸ்கா, 2 ஆம் இடம்: ராஜன் லத்திகா 3 ஆம் இடம்: கோபினாத் அக்சயா 3 ஆம் இடம்: சுரேஸ:குமார: தமிழினி
• பிரிவு (இ) 1 ஆம் இடம்: .ரஞ்ச்சித்குமார் ஜினோயா, 2 ஆம் இடம்: .முருகேசன் நிவேதா, 3 ஆம் இடம்: நடேசநாதன் சனுசியா 3 ஆம் இடம்: துஸ்யந்தன் தஷமி
• பிரிவு (ஈ) 1 ஆம் இடம்: மனோகரன் அபினயா,  2 ஆம் இடம்: யோகநாதன் பவிதா, 3 ஆம் இடம்: சுரேஸ் சியானா, 3 ஆம் இடம்: நெடுமாறன் லெயானா
• பிரிவு (உ) 1 ஆம் இடம்: பிறான்க் மறியா, 2 ஆம் இடம்: சசிதரன் ஆதிரியா, 3 ஆம் இடம்: துரைசிங்கம் அத்விகா
• பிரிவு (ஊ) 1 ஆம் இடம்: இராஜரட்ணம் ரக்ஷிதா, 2 ஆம் இடம:; சிவநாதன் யானுஜா, 3ஆம் இடம் ஆதவன் தீஷ்னா, 3 ஆம் இடம்: துஷ்யந்தன் துளசி

மத்திய பிரிவு – தனி
பிரிவு (அ) 1 ஆம் இடம்: கில்மன் வெனித்தா, 2 ஆம் இடம் கருணாகரன் சோமியா, 2 ஆம் இடம் சிறிரங்கன் ஹரிணி 3 ஆம் இடம் வசந்தகுமார் லேதிகா, 3 ஆம் இடம் சற்குணநாதன் கபிசியா,
• பிரிவு (ஆ) 1 ஆம் இடம்: சுமந்திரன் துளசிகா, 2 ஆம் இடம் கிருஸ்ணராஜா கிஷானி, 3 ஆம் இடம் செல்வரஞ்சன் அஸ்விகா, 3 ஆம் இடம் சிறிகாந்தன் அபிநயா
• பிரிவு (இ) 1 ஆம் இடம் சத்தியநாதன் அமலியா, 2 ஆம் இடம் இராஜசுதன் லிசிக்கா, 3 ஆம் இடம் யோகவனம் அஸ்வனா,
• பிரிவு (ஈ) 1 ஆம் இடம் ஜெகதீஸ்வரன் தியா, 2 ஆம் இடம் யூனேஸ் ஷெர்லின், 2 ஆம் இடம் தணிகாசலம் தணிகா, 3 ஆம் இடம் லோகேஸ்வரன் பிருத்திகா, 3 ஆம் இடம் புவனராஜா வலன்ரினா.
• பிரிவு (உ) 1 ஆம் இடம் மோகனராஜ் கிருத்திகா, 2 ஆம் இடம் சந்திரசேகரன் அனுஸ்கா, 2 ஆம் இடம் கனகலிங்கம் தருணிகா,  3 ஆம் இடம் பகீரதன் அட்ஷயா,  3 ஆம் இடம் ரகுதாஸ் ரபினாஷ்
• பிரிவு (ஊ) 1 ஆம் இடம் ஜெயபாலன் தருணிகா, 2 ஆம் இடம் பிரதாபன் அனோஷ்கா, 2 ஆம் இடம் ரஜீவரட்ணம் றெஹானா, 3 ஆம் இடம்: காண்டீபன் அவனிக்கா, 3 ஆம் இடம்: புவிராஜ் தீபிகா
• பிரிவு (எ) 1 ஆம் இடம் சுரேந்திரன் சயானிகா, 2 ஆம் இடம் குலச்செல்வம் காருணியா, 2 ஆம் இடம் பங்கயமணாளன் றுக்சிகா, 3 ஆம் இடம் பார்த்தீபன் ஹரிணி , 3 ஆம் இடம்: குகேந்திரன் சாயூரி
• பிரிவு (ஏ) 1 ஆம் இடம்: விடால் அயானா, 2 ஆம் இடம்: சிவபாலன் யானுஷா, 3 ஆம் இடம்: ரசனிக்காந்தன் வர்சிதா, 3 ஆம் இடம்: சுபாஸ்கரன் அஸ்விகா.

• மத்தியபிரிவு – குழு
குழு 1
1ம் இடம்: இல. 02 பாடல் – வாடி வாடி  (அபிராமி நாட்டியாஞ்சலி),
2ம் இடம்: இல. 11 பாடல் – கண்திறக்கும் (லாக்கூர் நொவ் தமிழ்ச்சோலை),
2ம் இடம்: இல. 12 பாடல் – செந்தமிழ்  (கவின் கலையகம்)
3ம் இடம்: இல. 15 பாடல் – வன்னி வன்னி (நாட்டிய சாஸ்த்திரா)

குழு 2
1ம் இடம்:  இல. 07 பாடல் – விழவிழ எழுவோம் (செல் தமிழ்ச்சோலை),
2ம் இடம்: இல. 03 பாடல் – வாடிவாடி தமிழ்ப்பெண்ணே (ஆதிபராசக்தி),
3ம் இடம்: இல. 08 பாடல் – போரம்மா உனையின்றி ( திரான்சி தமிழ்ச்சோலை),
4ம் இடம்: இல. 04 பாடல் – தமிழா தமிழா (அபிராமி நாட்டியாஞ்சலி)

• மேற்பிரிவு – தனி
• பிரிவு (அ)
1ம் இடம்: சிறிகரன் சஞ்சீத்தா, 2ம் இடம்: இரஜீவரட்ணம் பிரினா, 2ம் இடம்: நவரத்தினம் வைஷ்ணவி, 3ம் இடம்: ஜெயரூபன் ஜசியந்தி, 3ம் இடம்: மகாலிங்கம் சாரங்கி
• பிரிவு (ஆ)
1ம் இடம்: காணிக்கைநாதன் ஜொய்னோல்ட், 2ம் இடம்: மகேந்திரராஜா பார்கவி, 2ம் இடம்: பத்மராஜ் ஐஸ்வினி, 3ம் இடம்: குணரூபன் கயதுர்க்கா, 3ம் இடம்: காணிக்கைநாதன் ஜொய்லின்.
• பிரிவு (இ)
1ம் இடம்: திருஞானம் யானுக்கா,  2ம் இடம்: மனோச்குமார் விசாலி, 3ம் இடம்: பரமேஸ்வரன் சுருதிகா, 3ம் இடம்: குலேந்திரன் ரதுசா.
• பிரிவு (ஈ)
1ம் இடம்: பத்மராஜா கோபிகா, 2ம் இடம்: ஆனந்தராஜா அபிசா,  2ம் இடம்: சுரேஸ் சபினா, 3ம் இடம்: செல்வராஜ் கிறிஸ் ஜெகானோ, 3ம் இடம்: சுப்பிரமணியம் கிருஸ்ணயா
• பிரிவு (உ)
1ம் இடம்: சுதாகரன் நவிதா, 2ம் இடம்: ஜோன்பிறைன் அஸ்லே, 3ம் இடம்: ஜெயகாந்தன்  வானதி, 3ம் இடம்: லோகராஜன் வைஸ்ணவி
• பிரிவு (ஊ)
1ம் இடம்: பொன்னுச்சாமி யூலியன், 2ம் இடம்: ரவீந்திரன் பமிசேகா, 2ம் இடம்: சின்னத்தம்பி சரோன், 3ம் இடம்: சசிகுமார் அக்ஷிக்கா, 3ம் இடம்: மோகனராஜ் சஜினா

மேற்பிரிவு – குழு 
1ம் இடம்:  இல. 03 பாடல் – விழவிழ எழுவோம் (குசான்வில் தமிழ்ச்சோலை),
2ம் இடம்: இல. 01 பாடல் – விழவிழ எழுவோம் (அபிராமி நாட்டியாஞ்சலி),
2ம் இடம்: இல. 04 பாடல் – பாதசலங்கை (கவின்கலையகம்),
3ம் இடம்: இல. 02 பாடல் – மாவீரர் சாமியே (சேர்ஜி தமிழ்ச்சோலை)
3ம் இடம்: இல. 07 பாடல் – சோலையில் ஆடும் (செவ்ரோன் தமிழ்ச்சோலை)

அதிமேற்பிரிவு – குழு
1ம் இடம்:  இல. 01 பாடல் – கோயில் மணி ஓசை (ஆதிபராசக்தி),
2ம் இடம்: இல. 02 பாடல் – விழவிழ எழுவோம் (ஒள்னே சூ புவா தமிழ்ச்சோலை),
2ம் இடம்:இல. 04 பாடல் – இன்னும் இன உணர்வு (கவின்கலையகம்),
3ம் இடம்: இல. 06 பாடல் – விடுதலை வேள்வி (செவ்ரோன் தமிழ்ச்சோலை)

• சிறப்புப் பிரிவு – தனி 
1ம் இடம்: சுரேந்திரா லாவன்யா
2ம் இடம்: மாணிக்கா சரண்யா
3ம் இடம்: ம்பேபி லியேயுவா

தொடர்ந்து எதிர்வரும் 22.02.2020 சனிக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)