அன்னத்தை சின்னமாக்குவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்று(புதன்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிஸ்தர்களான அக்கிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டணியின் சின்னமாக அன்னத்தை அறிவிக்க முடியாது என்றும், அதனால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு அன்னம் சின்னத்தை அறிவித்தால் மீண்டும் 5 வருடங்களுக்கு அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

