அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் காலம் நாளையுடன் நிறைவடைகின்றது.
இதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பழிவாங்கள் தொடர்பில் இதுவரையில் 305 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சாட்சி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

