தமிழ் மக்களின் வாக்குகளை மொட்டுக்கு தாரைவார்க்க சிலர் முயற்சி?

324 0

பதுளை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை மொட்டு கட்சியினருக்கு தாரைவார்த்து கொடுக்க எம்மில் சிலர் எட்டப்பர்களாக மாறிபோயுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

லுணுகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னைய காலங்களை போன்று பெருந்தோட்ட மக்கள் விபரம் தெரியாத மக்கள் சமூகம் அல்லர் எனவும் எனவும் கூறினார்.

தற்போது எம்மவர்களும் ஏனைய சமூகத்திற்கு நிகராக முன்னேறியுள்ளதாகவும் ஆகவே, அவர்களை இனியும் ஏமாற்றலாம் என நினைத்து தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

தற்போது தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தமிழர்களுக்கு உரிமை வழங்காத மொட்டு சின்னக்காரர்கள் தமிழர்களின் வாக்குகளை மாத்திரம் பெற முயற்சிப்பது வேடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு ஏதுவாக எம்மவர்களில் சிலரும் தமிழர்களை காட்டிக்கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவ்வாறானவர்களை இனம்கண்டு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அரவிந்த குமார் மேலும் கூறினார்.