19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலி

286 0

வௌ்ளவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி ஒன்றின் 19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹெல்லொக் பகுதி​யை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.