iஇரகசிய காவல் துறை அதிகாரிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடுகளுக்குச் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை கண்டி – அலவத்துகொடை காவல் துறை கைது செய்துள்ளனர்.
இதன்போது இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் காவல் துறை கைப்பற்றியுள்ளார்.
வீடொன்றுக்கு தங்களை காவல் துறை என்று அடையாளம் காட்டிக்கொண்டு சென்று, வீட்டை சோதனையிடவேண்டும் என்று கூறியவர்கள், அங்கிருந்த 55 இலட்சம் ரூபாய் பெருமதியான பணம், நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் மேற்கொண்ட பின்னரே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, இரண்டு வாள்கள், கூரிய கத்திகள், கைவிலங்குகள், அலைபேசிகள், கொள்ளையடித்த மூன்று புத்தர் சிலைகள், ஐந்து இலட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பலவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

