ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு!

199 0

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று (17) முதல் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான 6 மாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களை இனம்காண ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து ஆணைக்குழுவில் உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவின் ஊடாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக பழிவாங்கும் நோக்கில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் சிலர் குறித்த ஆணைக்குழுவில் முறைபாட்டை பதிவு செய்துள்ளனர்.

அதற்கமைய இன்றைய தினம் ரியல் எட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கவுள்ளார்.

அதேபோல் மேலும் சில கடற்படை அதிகாரிகள் நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளனர்.

இதுவரை ஆணைக்குழுவுக்கு 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனினும் பல்வேறு தரப்பினரால் இதுவரை 263 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.