ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

190 0

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படோவிட்ட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.