இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

312 0

கஹவத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார்.

அதில் முதலில் 12,500 ரூபா பணத்ததை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

எஞ்சிய பணத் தொகையை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.