ஹெரோயினுடன் இருவர் கைது

308 0
கடவத்தை எல்தெனிய பிரதேசத்தில் 100 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது கொழும்பு மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) பிற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் களனி தலுகம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொலன்னாவை நகர சபைக்கு முன்னால் நேற்றிரவு மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமடகொட வேலுவன வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.