அரசியல் பழிவாங்கல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை நாளை முதல்

186 0

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நாளை (17) முதல் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான ஆறு மாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களை இனம் காண ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து ஆணைக்குழுவில் உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவின் ஊடாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னாள் கடற்படை தளபதி உள்ளிட்ட பலர் குறித்த ஆணைக்குழுவில் இதுவரை முறைபாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.