மாதம்பிட்டிய இரட்டை கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

49 0

மாதம்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு பேரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

39 வயதுடைய சந்தேகநபர் சேதவத்த வீதி, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (15) முற்படுத்தப்படவுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மாதம்பிட்டிய பொது மயானத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த இரட்டைக் கொலை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.