தல்பிட்டிய கங்கையில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு

47 0

தல்பிட்டிய பஸ்மன் சந்திக்கு அருகில் தல்பிட்டிய கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நபரின் உடல் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) தல்பிட்டிய கங்கையில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து உடன் செயற்பட்ட கடற்படை சுழியோடிகளால் கங்கையின் அடிப்பகுதியில் சிக்கியிருந்த நிலையில் காணாமல் போனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.