களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

194 0

களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சபை, பௌசர்களில் வழங்கப்படும் நீரை மாத்திரம் பருகுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வாத்துவ, களுத்துறை, பேருவளை, பயாகல, அளுத்கம, பொம்புவல, பிலிமினாவத்த மற்றும் பெந்தர ஆகிய இடங்களில் இந்த நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் பௌசர்கள் மூலம் குடி நீரை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் நீரில் கலந்துள்ள உப்பு அகற்றப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஆனால் களு கங்கையின் நீரை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.