இந்தியாவில் குண்டு வெடிப்பு : 3 வழக்கறிஞர்கள் காயம் !

57 0

இந்தியாவின் உத்ரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த குண்டுவெடிப்பில் 3 வழக்கறிஞர்கள் இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த பகுதியில் இருந்த மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.