GSP+ வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கை முன்னேற்றம்!

185 0

GSP+ வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது என ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களான வேலையில்லா பிரச்சினை, பாதுகாப்பு, குற்றச்செயல்களைத் தடுப்பது உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பலர் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் நிலவரம் தொடர்பாக கடந்த காலங்களில் ஆராய்ந்திருந்ததாகவும் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை ரீதியில் நோக்கும் போது, இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஒப்பந்தத்துடன் ஒன்றுபட்டு செயற்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அந்த செயற்பாடுகள் மந்த கதியிலேயே