கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

59 0

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டில் மோதிக் கொண்டதனாலேயே நேற்று(புதன்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.