அகழ்வு பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு!

67 0

மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது, குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாங்குளம் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத், அது தொடர்பில் காவற்துறையினர் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார், மனித எச்சங்கள் மீட்கப்ப்ட இடத்தை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறு காவற்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.