மட்டக்களப்பு ஊடாக கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சோதனை!

220 0

மட்டக்களப்பு ஊடாக தூர இடங்களுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 10 பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து வரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் இரவு விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஊடாக கொழும்பு உட்பட தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ்கள் சில வீதி அனுமதியை பெற்றிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பொத்துவில் உட்பட பல பகுதிகளில் இருந்து மட்டக்களப்பு ஊடாக கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.போக்குவரத்து பொலிஸாரினால் இதன்போது வீதி போக்குவரத்து அனுமதி தொடர்பாகவும் பரிசோதனைகள் நடாத்தப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது வீதி போக்குவரத்து அனுமதி உட்பட முறையான அனுமதிகளைப்பெற்றிருக்காத பஸ்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.