கரோனா வைரஸ் கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது: உலக சுகாதார நிறுவனம்

31 0

கரோனா வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்திருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள், நோய் கண்டறிவது மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது தொடர்பாக நடந்த
இரண்டு நாள் கூட்டத்தில் உலக சுகாதர இயக்குனர் ஜெனரல் டெட்ரோ இன்று உரையாற்றினார்.

அதில் அவர் பேசும்போது, “சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 1,017 பேர் பலியாகி உள்ளனர். 40,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தற்போது அவசர நிலையாகி உள்ளது. கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் பல ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.