எனது முதல் இந்தியப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் என்னை வரவேற்பார்கள்: ட்ரம்ப்

272 0

எனது இந்திய சுற்றுப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் என்னை வரவேற்பார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி மாதம் 24, 25-ம் தேதிகளில் இந்தியா வர இருக்கிறார். இந்தியாவில் குஜராத் மற்றும் டெல்லிக்கு ட்ரம்ப் வருகை தருகிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் தனது இந்தியப் பயணம் குறித்து அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “நான் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். எங்களிடம் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.

விமான நிலையம் முதல் மோடேரா மைதானம் வரை 5 முதல் 7 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மோடி சிறந்த மனிதர். எனது சிறந்த நண்பர். நான் எனது முதல் இந்திய சுற்றுப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்” என்றார்.

 

முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இப்பயணத்தில் அமெரிக்கா – இந்தியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.