மட்டு வாளைச்சேனையில்  மிதிவெடிகள் மீட்பு

50 0

 


மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்

விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த வயல் பகுதியில், விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் படையினர், நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து 5 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.