விடுதலைக்கு வலுச்சேர்த்த முல்லைக் கலைஞன்!

398 0

முல்லை ஜேசுதாசன் என்னும் தாயகக் கலைஞன் இன்று விழிமூடிக்கொண்டார் எனும் துயரத்தை சுமந்து நிற்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு கிராமம் பெற்றெடுத்த பெருமைக்குரிய கலைஞன் அவர். போராட்டத்தோடும் போராளிகளோடும் நெருக்கமானவர். தாயகவிடுதலைப்போராட்டம் அவரது திரைத்துறைத் திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்தது. தாரகம் இணையம்


இலைமறை காயாய்… துன்பங்களோடு போராடிக்கொண்டிருந்தவரை உலகறிந்த கலைஞனாக்கிற்று. தாரகம் இணையம்

சாமியப்பா…. இப்படித்தான் அவரை கலையுலகம் அறியும்.
அவர் ஒரு சிறந்த கலைஞன் என்பதை குறியீடாக உணர்த்திநிற்கும் அவரது எளிமையான தோற்றம்… மற்றைய கலைஞர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகும் மானிடப்பற்று…..

தாயகத்தின் கலைபண்பாட்டுக்கழகத்திலும், நிதர்சனம் நிறுவனம் தேசியத் தொலைக்காட்சி நிறுவனம் புலிகளின்குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை என பல ஊடகங்களிலும் தன் ஆளுமைமைய வரைந்தவர். தாரகம் இணையம்

தேசியத் தலைவர் அவர்களாலும் தேசத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட உணர்வுமிக்க கலைஞர் அவர். எழுத்து, நடிப்பு, நெறியாள்கை என இன்னுமின்னும் பல்துறைக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அவரது எழுத்தின் ஆளுமைக்கு ‘ நீலமாகிவரும் கடல்’ என்கின்ற சிறுகதைத்தொகுப்புநூலே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தன்னுடைய மண்ணை> தன்மக்களின் அவலங்களை உணர்வோடு வெளிப்படுத்திய படைப்பு அது. வெளிச்சம் இதழில் பல கதைகளை எழுதியவர் முல்லை ஜேசுதாசன் அவர்கள்.

தாயக விடுதலைப்போராட்டம் பற்றிய உன்னத கருத்துருவாக்கங்களின் உரித்துடையவர். தனது எண்ணக்கருக்களை மட்டுமன்றி, தாயக படைப்பாளிகள் பலரது மூலக்கதைகளை முன்னுரிமையளித்துக் குறும்படங்களாக்கியவர். நல்ல வாழ்வுதேடி நகர்ந்துதிரிந்த பல மனிதர்களிடையே, நல்ல கதைகளைத்தேடித் திரிந்தமனிதர்.

ஈழத்தின் பல குறும்படங்களை இயக்கியும் பல குறும்படங்களில் நடித்தும் பெருமைபெற்றவர். தமிழகத்தின் சிறந்த திரைப்பட இயக்குநர்களுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். அவர்களால் மிகவும் போற்றப்பட்டவர்.

ந.கிருஷ;ணசிங்கம் அவர்கள் எழுதி, அவர் இயக்கிய செவ்வரத்தம் பூ குறும்படத்தை தேசியத்தலைவர் அவர்கள் பாராட்டி அவருக்குப் பரிசும்வழங்கியிருந்தார். இவ்வாறு பலமுறை பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டாலும் அடக்கமாகவும், அமைதியாகவும், எளிமையாகவும் வாழ்ந்தவர் அவர். பொருளீட்டுவதில் ஒருபோதும் நாட்டமற்றவர். எப்போதும் தனக்கெனத் தனிப்பட்ட விளம்பரத்தை விரும்பாத இதயத்தின் சொந்தக்காரர். பாராட்டுக்கள் தொவிக்கும்போது தலையை ஆட்டி அமைதியாக நன்றி சொல்லும் மனிதர்.

அவரது தோளிற் தொங்கும் சிறுபைமட்டும் தான் அவரது சொத்து. அந்தப் பையுடனேயேதான் அவரது தேடலுக்கான பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. தாரகம் இணையம்

அவரின் நீண்ட கலைப்பயணத்தில் போர் பாதிப்புகளை ஏற்படுத்தியது. போரின் அவலங்களுக்குள் சிக்கி, முள்ளிவாய்க்கால்வரை குண்டுகளுக்கும் விமானத்தாக்குதல்களுக்கும் நடுவே ஓடி…. பெற்றெடுத்த தன் மகனையும் இழந்து,அவர் உயிர் மீண்டார்.

போரின் வடுக்கள் எல்லோரையும் போல அவரையும் பாதித்தன. உயிர்வாழ்தலுக்காக உழைக்கத் தொடங்கினார். பல தொழில்களைச் செய்தார். அண்மையில் கொஞ்சக் காலமாகத்தான் மீண்டும் கலைஞனாக செயற்படத் தொடங்கியிருந்தார்.தாரகம் இணையம்

அதற்குள்…. மரணம் முந்திக்கொண்டது. ஒரு கலைஞனாகவே அவர் சாவடைந்தார். கலைஞனுக்கு ஒருபோதும் மரணமில்லை. எப்போதும் தன் எச்சங்களான கலைப் படையல்களில் அவர் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பார்.

அவரின் இழப்பு கலையுலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாக நிகழ்ந்திருக்கிறது.