அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு 2.8 பில்லியன் ரூபாய்

271 0

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி முதல் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 2.8 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் இன்று (07) தெரிவிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த கேள்விக்கு ஆளும் தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளிக்கையில் இதனைக் கூறினார்.