மட்டக்களப்பில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

261 0

 

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி- இரண்டாம் குறிச்சியில் ஒருவரும், வாழைச்சேனை- ஆலிம் வீதியில் ஒருவரும் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த இருவரிடம் இருந்து டெட்டனேட்டர்கள், வயர்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.