மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

338 0

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லைநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திருகோணமலை – மூதூர் பகுதியைச் சேர்ந்த அனீபா முஹமட் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் சாஜஹான் சபீர் எனும் நபர் காயமடைந்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு (06) 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் தோப்பூர் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் சென்ற வேளை மோட்டார் சைக்கிள் பாதையைவிட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.