லொறில் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சாரதி கைது

393 0

திருகோணமலை – பாலம்பட்டார் பகுதியில் தீ பரவிய லொறியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த லொறி சாரதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி திருகோணமலை – பாலம்பட்டார் பாலத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் தீ பரவியதாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேலும் இதன்போது சாரதியின் ஆசனத்திற்கு பின்பக்க ஆசனத்தில் தீக்கிரையாகிய சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட லொறி சாரதியின் மனைவியும் கொலையுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.