வவுனதீவில் தமிழ் காவல்துறை உறுப்பினர் அடித்துக்கொலை

250 0

 

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸார் அடித்துக்கொலைசெய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.