தமிழீழத் தேசியத்தலைவரையும் சம்மந்தரையும் ஒப்பிடும் வீரகுமார!

267 0

எமது தமிழீழத்தேசியத்  தலைவர் கட்டமைத்து பல்வேறு மாவீரர்கள் உயிர் கொடுத்து போராடிய எமது விடுதலை போரை  உதாசினம் படுத்தும் தொணியில்    வீரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்டது போன்று யுத்தம் செய்ய கூடிய நிலைமை நாட்டில் தற்போது இல்லை என்பதை இரா.சம்பந்தன் உணர்ந்துகொள்ள வேண்டும். நாடு சமாதானமாக முன்னோக்கி செல்ல முயற்சிக்கும் போது அதில் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதே அரசியல் தலைவர்களாக அவர்கள் செய்ய வேண்டியது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய ரீதியான தனித்துவங்களில் கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
இரா. சம்பந்தர் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். காலம்காலமாக சிங்கள அரசு அவரிற்கு கொடுத்துவரும் சலுகைகளை அனுபவித்துவரும் இவர், தனது சலுகைகளை கைவிடமுடியாத நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கைவிட்டு சிங்களதேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழர்கள் வாழவேண்டுமென்ற கொள்கையுடன் சிங்களக்கூலியாக செயற்பட்டுவருகின்றார்.