சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு

456 0

72 ஆவது தேசிய சுதந்திரத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலத்தினை பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் சேவையில் இருந்து விலகிய முப்படையினர் மீண்டும் சேவையில் இணைவதற்கு அல்லது சேவையில் விலக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சட்டரீதியாக வெளியேறவும் அல்லது மீண்டும் சேர்ந்து கொள்வதற்கும் விரும்பும் இராணுவ வீரர்கள், அவர்களின் பயிற்சி காலத்தின் போது வெளியேறியிருந்தால், அந்தந்த படை அணிகளில் அல்லது இராணுவ ஆளனி பயிற்சி நிலையங்களுக்கு செல்லும்மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன்படி பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் இராணுவ நிர்வாக பணிப்பாளர்கள் அனைவருக்கும் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக, அவர்களின் ஆவணங்கள் அந்த தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், பாஸ்போர்ட் அல்லது அதன் பிரதி, வங்கி புத்தகத்தின் பிரதி, மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் இல்லாவிட்டால் கிராம அதிகாரியின் கடிதம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இராணுவ அடையாள அட்டை அல்லது குறித்த அடையாள அட்டை தொலைந்து போயிருந்தால் பொலிஸாரின் பதிவு செய்யப்பட்ட புகாரின் பிரதியினை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் அவர்களின் உத்தியோகபூர்வமான விலகளுக்கு தகைமையாக காணப்படும். மேலும் இராணுவ முகாமில் இருந்து குறித்த விடயங்களை உத்தியோகபூர்வமாக முடிப்பதற்கு விரும்பியவர்கள் 2 நாட்களுக்கான தங்களுக்கு தேவையான அனைத்து முக்கியமான அத்தியவசி பொருட்களை கொண்டுவருமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

இந்த பொது மன்னிப்பானது 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்யோகபூர்வமான விடுமுறையில் இல்லாமல் சேவையில் இருந்து இடை விலகிய முப்படையினருக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.