பசறைப் பகுதியைச் சேர்ந்த கனவரல்லை பெருந்தோட்டத்தை அண்மித்த அடர்ந்த காட்டுப் பகுதியில் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளை இன்று (04-02-2020) பசறை பொலிசார் மீட்டுள்ளனர்.
பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே பொலிசார் விரைந்து மேற்படி பொருட்கள் அடங்கிய பையொன்றை மீட்டனர்.
இதுகுறித்து எவரும் கைது செய்யப்படவில்லை. என பசறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

