கல்கிஸ்ஸ கொலை சம்பவம் தொடர்பில் 2 இளைஞர்கள் கைது!

324 0

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (03) அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.