மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

336 0

20sri-lanka-shekhar-yadav05_660_020813082441சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இம்மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணியினரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 28ஆம் திகதி அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இந்தப் பயணத்தின்போது சீனத் தலைவர் மற்றும் சீனாவில் வாழும் சிறீலங்கா நாட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவர் எத்தனை நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார் என்ற தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.