கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆயுர்வேத வைத்திய முறையை கண்டறிய நடவடிக்கை!

268 0

கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பதற்காக ஆயுர்வேத வைத்திய தீர்வை கண்டறிவதற்கு விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தாக்கங்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஆயர்வேத மருத்துவம் மூலமான தீர்வு கண்டறியப்படவுள்ளதோடு, வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையின் மூலம் மேற்கொள்ளக் கூடியதாகவும் சுகாதார பாதுகாப்பு முறை குறித்த பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், வேறொருவருக்கு தொற்றை ஏற்படுத்தும் வைரஸின் ஊடாக பரவுவதன் மூலமும், பிராணிகள் மூலமும், நபர்கள் மத்தியில் இடம்பெறும் இருமல் மற்றும் தும்மல் ஆகியவற்றின் மூலமும் சுற்றாடலில் பரவும் வைரஸின் மூலம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடுதல் அல்லது கைகள் அல்லது முகங்களை தொடுவதன் மூலமும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை தொடுவதன் மூலமும் பரவுகின்றது.

எனவே கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக சுதேசிய வைத்திய முறையில் உள்ள ஆலோசனை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் பரவும் வைரஸ்களை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையின் மூலம் மேற்கொள்ளக்கூடிய சுகாதார பாதுகாப்பு முறை தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவது குறித்து இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்கது.