நாட்டி ல், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக உபகரணங்களை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சிற்கு அறிவித்திருப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையில் ஈடுபடும் போது, வைத்திய விநியோகப் பிரிவின் மூலம் ஐடிஎச் வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவத்தார். .
<p>ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய, கொரோனா ரைவஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டுக்குழு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் தலைமையில் இடம் பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.

