பெரும்போக அறுவடையில் இம்முறை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாக நெல் கொள்வனவு சபை தெரிவித்துள்ளது.
நெல் கொள்வனவிற்காக 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலர்த்தப்பட்ட நெல் 50.00 ரூபாவிற்கும், உலர்த்தப்படாத நெல் 45.00 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நெல் கொள்வனவு சபை தெரிவித்துள்ளது.

