கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீன நாட்டு பெண் முழுவதுமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற கூடிய நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

